பங்கு சந்தையில் முதலீடு செய்யும் முன் தெரிந்திருக்க வேண்டியவை:


·         பங்குகளின் மதிப்பை அடிப்படையாக கொண்டு வாங்குவது தான் முதலீடு, பங்குகளின் விலையை அடிப்படையாக கொண்டு வாங்குவது சூதாட்டம்.
·         பங்குசந்தையில் நுழையும் முன் ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும், இங்கு 60 % லாபமும் 40 % அடைய வாய்ப்புகள் உண்டு.
·         பங்குச்சந்தைக்குள் நுழைந்த உடன் நமக்கு நட்டம் மட்டுமே ஏற்படும்.
·         லாபம் ஈட்டும் முன் நட்டம் வரமால் எப்படி முதலீடுகளை பாதுகாத்தல் என்பதை கற்க வேண்டும்.
·         யாருடடைய தூண்டுதலின் பேரில் பங்குகளை வாங்கவோ விற்கவோ கூடாது.
·         உங்களுடைய நம்பிக்கை இங்கு பலிக்காது மாறாக தெளிவான ஆய்வுகள் மட்டுமே உங்களுக்கு பலன் அளிக்கும்.
·         அத்தியாவசிய தேவைகள் போக உள்ள பணத்தை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.
·         கடன் வாங்கி இங்கு முதலீடு செய்ய கூடாது.
·         பருவநிலை மாறுவதை போல பங்குச்சந்தை நாம் எதிர்பாக்காத பல மாற்றகளை கொண்டிருக்கும்.
·         உணர்ச்சிவச படமால் முடிவுகளை எடுக்க வேண்டும்.
·         பங்குகளை வாங்குவது விற்பது இவை சரியாக ஆராய்ந்த பின்னர் மட்டுமே செயல்படுத்த வேண்டும்.
·         பங்குகளை வாங்கி/விற்ற பின்னர் இவ்வாறு செய்து விட்டோமே என நினைக்க கூடாது.
·         இது ஒரு வகையான கலை, எளிதில் கற்றுக்கொள்ள முடியாது.
·         உலகமே உங்களை எதிர்த்து நின்றாலும் உங்களுயை ஆய்வுகள் சரியாக இருக்கும் பட்சத்தில் அதை விட்டு மாறாமல் நிலையாக இருக்க வேண்டும்.
நான் எப்பொழுதுமே ஒரு முதலீட்டாளராகவே இருக்க ஆசை படுகிறேன், பங்குசந்தையில் தினசரி வணிகம் என்பது கத்தி போன்றது அதை தெரிந்தால் முறையாக பயன்படுத்துங்கள் இல்லையெனில் அது உங்கள் கையை வெட்டி விடும்.