“குறைவான விலைக்கு வாங்கு அதிகமான விலைக்கு விற்றுவிடு" என்பதைத் தவிர பிற சிறந்த பங்குச்சந்தைக் குறிப்புகள்:

 பங்கு சந்தையில் மூன்று விதமான முதலீட்டார்கள் பங்கு கொள்கிறார்கள்.

1. தினசரி வர்த்தகர் (Day trader) - இவருக்கு பங்குகளின் விலை மட்டும் பிரதானம். ஒரே நாளில் வாங்குவது விற்பது என்று விளையாடுகிறார்கள். ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு பிறகு கூட்டி கழித்து பார்த்தால், பெரும்பாலானவர் நஷ்டமே பார்க்கிறார்கள்
2. குறுகிய கால முதலீட்டாளர் (Short Term Investor) - இவருக்கு பங்குகளை வாங்கி, ஓர் இலக்கு அடைந்து விட்டால் அதை விற்று லாபம் பாக்கிறார்கள். அதே போல் நஷ்டம் ஆகி விட்டால் வெளியே வந்து விடுகிறார்கள். நாளடைவில் லாப நஷ்டம் இரண்டும் கிட்ட தட்ட பூஜியம் ஆகவே இருக்கிறது
3. நீண்ட கால முதலீட்டாளர் (Long term investor) - இவருக்கு பங்குகளை ஒரு நிறுவனத்தின் பாகமாக பார்க்கும் தன்மை உள்ளது. ஒரு பங்கு வாங்கும் போது, அந்த நிறுவனத்தின் வணிக உரிமையாளர் (Business owner) போல் யோசிக்கும் முதிர்ச்சி இருக்கும். அதனால் இவர் வாங்கும் பங்குகளை நன்றாக ஆராய்ந்து சரியான விலையில் வாங்குகிறார், மற்றும் பல வருடம் வைத்திருக்கிறார். இதன் மூலம் இவருக்கு டிவிடெண்ட், போனஸ், ரைட்ஸ் மற்றும் பைபாக் (Buy Back) போன்ற நன்மைகளும், வருமானமும் பங்கு மதிப்பு வளர்ச்சியும் கிடைக்கின்றது. இது தவிர அவருடைய வருங்கால சந்ததிகளுக்கு பெரும் செல்வத்தை அளிக்கும் தகுதியும் வாய்ப்பும் உருவாகிறது.
ஒரு முதலீட்டாளராக, நான் மூன்றாவது வகையான நபர்.