முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்" என்ற பழமொழியின் விளக்கம் மற்றும் முருங்கை மரத்தின் பயன்கள்:



முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்பது நம் முன்னோர்கள் காலம் காலமாக சொல்லி, நாமும் செவி வழி வந்ததை ஆமோதித்த வரி. இதனால் பலர் வீட்டுக்கு ஆகாதுஎன முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்துவிடுகிறார்கள். வெளிநாட்டவரோ, இதன் பலனை நன்கறிந்து  நம் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்து, பக்குவப்படுத்தி பேக் செய்து நமக்கே விற்கிறார்கள்.
முருங்கையின் இலை, பூ, காய், விதை, பிசின், மரப்பட்டை என அனைத்தும் நன்மை பயனளிப்பவை.இதன் பலன் அறிந்து நாம் அனுதினமும் முருங்கையை உணவில் பயன்படுத்தினால், வயதானாலும் உடலை ஆரோக்கியத்தோடு வைத்து (வயது மூப்பின் காரணமாக கையில் தடி / குச்சி ஊன்றாமல்வெறுங்கை வீசி நடந்து செல்ல முடியும் என்பதையே முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்என்று சொல்லி வைத்தார்கள். முருங்கையை நட்டு, அதன் பலன் அறிந்து, நமக்கும் நமது வருங்கால சந்ததியினருக்கும் வளம் சேர்ப்போம்.